நாங்கு மரம்
அறிவியல் பெயர் :
மெசுவா பெர்ரா
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளை கொண்ட பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டை மென்மையானது மற்றும் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- இலைகள் இளமையில் சிவப்பு நிறமுடையது, பின் பளபளப்பான பச்சை நிறமுடையதாக மாற்றமடைகிறது.
- மலர்கள் மணமானது மற்றும் வெண்மையானது.
- காய்கள் வட்ட வடிவமானது, கடினமானது மற்றும் பச்சை நிறமுடையது.
- விதைகள் சாம்பல் நிறமுடையது. விதைகளின் ஒரு பகுதி தட்டையாக இருக்கும்.
பரவல் :
- இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளை தாயகமாக கொண்டதாகும்.
வாழிடம் :
வெப்பமண்டல ஈர பசுமை மாறா காடுகள் மற்றும் பகுதி பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
இம்மரம் நல்ல நீர் தேங்காத, ஆழமான மற்றும் வளமான மண்ணில் வளரும் தன்மையுடையது.
மண் pH :
4.3 – 6.9
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600 மீ மேலுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
24 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரும் தன்மையுடையது.
- இரண்டாம் நிலை காடுகளில் இளமையாக இருக்கும் இம்மரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நிழலை தாங்கி வளரும் தன்மையுடையதால் எளிதாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது டிசம்பர் - ஜனவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட காய்கள் வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட விதைகள் தரம் பிரிக்கப்படுகிறது.
- விதைகளை 5 மாதங்கள் வரை பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்க முடியும்.
- குறைந்த நாள் மட்டுமே விதை முளைப்புத்திறனை கொண்டிருக்கும்.
- ஒரு கிலோ விதையில் 450 - 1200 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 55 – 95 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 46 – 70 சதவிகிதமாகும்.
- குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- தாய்பாத்தியை களைகளின்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 2 மாத முடிவில் அனைத்து விதைகளும் முளைத்து விடுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு :
- விதைகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் நேரடியாக நிலத்திலேயே விதைக்கப்படுகிறது.
நாற்றுகள் நடவு முறை :
- 1 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இரண்டாம் பருவ மழை காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 1.8 x 1.8 மீ என இருக்க வேண்டும்.
- அவ்வப்போது களைகளை நீக்க வேண்டும். நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
- மரங்கள் நன்கு வளர மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க வேண்டும். மரங்கள் வளர வளர அருகிலுள்ள மரங்களை வெட்டி பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.
- 18 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில் துவரையை ஊடுபயிராக நட்டு கன்றுகளுக்கு நிழல் தர வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் ஓரளவு உறுதியானது மற்றும் பூச்சி மற்றும் கரையான் தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையது.
- இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும், உள் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- இது இரத்தசோகையைப் போக்கவும், வியர்வையை தூண்டவும், தோல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
-->