சமுத்திர பழ மரம்
அறிவியல் பெயர் :
பேரிங்டேனியா அக்குடாங்குலேட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும். சமஸ்கிருதத்தில் இதன் பொதுப்பெயர் ஹிஜ்ஜாலா அல்லது ஹிஜ்ஜா.
- இம்மரம் 5 – 8 மீ உயரம் வரை வளரக்கூடியது மற்றும் அடர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்த வட்ட வடிவமுடையது.
- சிவப்பு வண்ணமுடைய பூக்களை கொண்டது. இப்பூக்கள் 20 செ.மீ நீளமுடைய தண்டில் அமைந்திருக்கும்.
- காயானது கேப்சியூள் வகையை சேர்ந்தது மற்றும் 4 பக்கங்களை கொண்டது. 3 – 4 செ.மீ நீளமுடையது. விதைகள் நீர் மார்கமாக பரவுகிறது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1100 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
12 - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- கடினமான தன்மையுள்ள மண்ணிலும் வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும். வறண்ட பகுதிகளில் மற்றும் வறட்சி காலங்களில் இலையுதிர் மரமாகவும் இலைகளை உதிர்த்து விடுகிறது.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- தாய்பாத்தியை நிழல் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 20 – 25 நாட்களில் விதைகள் முளைத்துவிடும்.
- வெயில் அதிகமிருப்பின் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் தாய்பாத்தியிலிருந்து வளர் இடுபொருகள் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் விதை மற்றும் சாறு பாரம்பரிய மருந்தாக பயனடபடுகிறது.
- வலி நிவாரணி மருந்து தயாரிக்க இம்மரம் அதிகமாக பயன்படுகிறது.
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
- இம்மரம் படகு தயாரிக்க, கிணறு தோண்ட மற்றும் மற்ற மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.