மாவிலங்காய் மரம்
அறிவியல் பெயர் :
கிரிட்டிவா ரிலிஜியோசா
பொதுப்பண்பு :
- மெதுவாக வளரகடகூடிய இளையுதிர் மரமாகும்.
- அதிக எண்ணிக்கையிலான கிளைகளை கொண்டது.
- இலைகள் பளபளப்பான பச்சை நிறமுடையது.
- இம்மரம் வெண்ணிற புள்ளிகளுடன் கூடிய பட்டையை கொண்டது.
- இம்மரம் பொதுவாக கோவிலின் அருகாமையில் வளர்க்கப்படுகிறது. இம்மரம் சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
திறந்த இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
வளமான மண்ணிலும், அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 2250 மி.மீ
வெப்பநிலை :
24 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு நிழல் விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக பெருக்கமடையக்கூடியது. வேர் கிழங்குகள் மூலமும் பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
- பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
- நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 எனவும் இடைவெளியானது 5 – 10 மீ எனவும் இருக்க வேண்டும்.
- மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு உணவு செரிமானமின்மையை குணப்படுத்த பயன்படுகிறது.
- இதன் பட்டைகள் மற்றும் இலைகள் ருமாட்டிக் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுகிறது.
- இதன் இலைகள் சூடுபடுத்தப்பட்டு காதுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- இதன் பூக்கள் பித்தநீர் சுரப்பை தூண்ட பயன்படுகிறது. மேலும் பூக்கள் வயிற்று வலியை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட காயும் மருந்தாக பயன்படுகிறது.