வெக்காளி மரம்
அறிவியல் பெயர் :
அனோஜிசிஸ் லாட்டிபோலியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய இலையுதிர் மரம்.
- மரப்பட்டையானது மென்மையானது மற்றும் வெளிர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். பெரியது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
- காயானது டுரூப் வகையை சேர்ந்தது. ஆப்பு வடைவமான இதன் காய் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. செம்பொறை மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
மண் pH :
4.3 – 8.0
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
625 – 2250 மி.மீ
வெப்பநிலை :
38 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி, பாறைகள் நிறைந்த பகுதி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு முறை மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாகவும் மற்றும் மறுதாம்பு மூலமாகவும் இனப்பெருக்கமடையக்கூடியது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது டிசம்பர் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 1 இலட்சம் விதைகளிருக்கும்.
- விதைகள் 8 மாதங்கள் வரை முளைப்புத்திறன் கொண்டிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 0.5 – 5 சதிவிகிதமாகும்.
- குளிர் நீரில் 48 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் துவுதல் முறையில் விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்ட பின் தாய்பாத்தியானது நெல் வைக்கோல் கொண்டு மூடப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- இரண்டு இலைகள் துளிர் விட்ட பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளிகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குறிப்பிட்ட இடைவெளியில் களையெடுத்தல் மற்றும் மண் மேம்பாட்டு பணிகள் செய்வது அவசியமாகும்.
- 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3700 – 4000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படுகிறது. வேளாண் உபகரணங்கள் தயாரிக்க மற்றும் வீடுகட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது.
தீவனம்:
- டஸார் பட்டுபுழு வளர்ப்பிற்கு இலைகள் தீவனமாக அளிக்கப்படுகிறது.
- கால்நடைகளுக்கு தீவனமாகவும் வழங்கப்படுகிறது.
எரிபொருள்:
- சிறந்த எரிபொருன் 17,600 – 20,500 கிலோ ஜீல்.
- சிறந்த கரியினை தரவல்லது.
-->