ஏழிலைப்பாலை
அறிவியல் பெயர் :
அல்ஸ்டோனியா ஸ்கோலாரிஸ்
பொதுப்பண்பு :
- மிதமான அளவுடைய உயரமான பசுமை மாறா மரமாகும்.
- இலைகள் அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் வெண்ணிறமாகவும் காணப்படும்.
- கனியானது எண்ணற்ற விதைகளை கொண்டிருக்கும்.
பரவல் :
- இம்மரம் இந்தியாவில் ஈரப்பதமிக்க பகுதிகளில் காணப்படும்.
- இவை மேற்கு கடற்கரை காடுகளில் அதிகம் வளரும் மரவகையாகும்.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளரும் மரமாகும்.
மண் :
செம்மண், கரிசல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
900 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 – 1500 மி.மீ
வெப்பநிலை :
34 – 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு நிழல் விரும்பி மரமாகும்.
- இது வளர ஈரப்பத மண் அவசியமாகும்.
- மறுதாம்பு நன்கு தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- சாதகமான சூழலில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ கனியிலிருந்து 20 கிராம் விதைகளை பெறலாம்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதையானது குழி தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்ட விதைகள் மேல் மணல் போன்ற தன்மையுடைய மண் கொண்டு மூடப்படுகிறது.
- ஏப்ரல் - ஜுன் மாதகால இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
- ஒரு சதுர மீட்டருக்கு 35 கிராம் விதைகள் விதைப்பிற்கு தேவைப்படும்.
- தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட மால இடைவெளியில் களையெடுத்தல் அவசியமாகிறது.
- 7.5 செ.மீ வளர்ந்த நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நடவிற்கு முன் நிலத்தை நன்கு உழுது தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
- நடவிற்கு முன்னதாகவே குழிகளை எடுத்த 2 மாதம் வரை உலர்த்த வேண்டும்.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும். பின் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
- இலை அல்லது இறந்த தாவரங்களை கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணின் ஈரப்பதத்தை சிறிது நாட்கள் தக்க வைத்துக்கொள்ளலாம்.
- 6 - 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன் மரங்கள் பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது.
- கரும்பலகைகள் தயாரிக்கவும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.
- இம்மரம் மூன்றாம் ரக ஒட்டுப்பலகைகள் தயாரிக்க பயன்படுகிறது.
- இம்மரம் தீக்குச்சி தயாரிக்க பயன்படுகிறது. இரண்டாம் தர பென்சில்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மரப்பட்டை:
- சீதபேதி வயிற்றுப்போக்கிற்கு மருந்தாக பயன்படுகிறது.
- பட்டையின் சாறு பரு மற்றும் குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது
-->