காட்டு இலந்தை மரம்
அறிவியல் பெயர் :
ஜிஜுபஸ் நுமுலேரியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- இலைகள் வட்ட வடிவமுடையது மற்றும் சிறியது.
- பூக்கள் சிறியது மற்றும் பால் போன்ற வெண்மை நிறமுடையது.
- காய்கள் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. களிமண்ணில் வளரும் தன்மையற்றது.
மண் pH :
5.5 -7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1700 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
100 – 1000 மி.மீ
வெப்பநிலை :
15 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது ஜுன் – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட காயானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3300 - 5000 விதைகளிருக்கும்.
- விதைகள் குறைந்த நாட்களுக்கே முளைப்புத்திறன் கொண்டது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- அதிகப்படியான களிமண் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- விதைகள் தரம் பிரிக்கப்பட்டு, பெரிய விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் பைக்கு 2 விதைகள் வீதம் விதைக்கப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும். ஈர பகுதிகளில் குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- 6 – 12 மாதங்களான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
- கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும். பழங்களுக்காக வளர்க்கப்படும் பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ அல்லது 12 x 12 மீ என இருக்க வேண்டும்.
- பிப்ரவரி – மார்ச் மாத இடைவெளியில் மரத்தின் கிளைகளை நீக்க வேண்டும்.
- கிளைகளை நீக்குவதால் முளைக்கும் புதிய கிகைள் நல்ல கனிகளை தரும்.
- இம்மரத்தின் நல்ல வளர்ச்சிக்கு நடப்பட்ட இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
- நடப்பட்ட 2 வருடங்களிலிருந்து காய்க்க துவங்குகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு கிலோ காய் 100 – 120 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
- ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் பழுத்த மற்றும் காய்ந்த காய்கள் உணவுப்பொருளாக பயன்படுகிறது.
- இதன் வேர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
- இதன் இலைகள் டசார் வகை பட்டு புழு வளர்ப்பிற்கு பயன்படுகிறது.
- மரம் கட்டுமான பணிகளுக்கும், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கோல்ப் மட்டைகள் தயாரிக்கவும் மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.