செஞ்சந்தனம்
அறிவியல் பெயர் :
டீரோகார்பஸ் சண்டாலினஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை கருஞ்சாம்பல் நிறமுடையது.
- இலையானது அகன்றது மற்றும் அடிப்பகுதியில் பழுப்பு நிற நார் போன்ற நரம்பை கொண்டது.
- இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
- பூக்கள் மஞ்சள் நிறமுடையது.
- இறக்கை போன்ற நெற்றை கொண்டது. இவை சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. குறிப்பாக இம்மரம் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
அனைத்து மண் வகைளிலும் வளரும் தன்மை கொண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
150-900மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
350 – 1350 மி.மீ
வெப்பநிலை :
11 - 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வலிமையான ஒளி விரும்பி மரமாகும்.
- தீயை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
- மறுதாம்பு உற்பத்தி மூலம் நன்கு தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
பெரிய இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
25மீ
இயற்கை மறு உருவாக்கம்:
- மறுதாம்பு மூலம் அடுத்த தலைமுறை மரம் வளர்கிறது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
பயிர்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதையானது பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- விதையின் முளைப்புத்திறன் 12 மாதம் வரையிருக்கும்.
- ஒரு கிலோவில் 900 – 1400 நெற்றுகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 25 - 30 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி
- குளிர் நீரில் 3 நாட்கள் ஊர வைக்க வேண்டும். அல்லது சான கரைசலில் 48 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. செம்மண் கொண்டு தாய்பாத்தி அமைப்பது நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
- 10 – 15 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு அல்லது 4 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
அடிக்கட்டை நடவு:
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியினுள் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கலவையை குறிப்பிட்ட அளவ இடுவதனால் நாற்றின் வளர்ச்சி துரிதமாகிறது.
- மேல் மண் கொண்டு நாற்றுகள் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது. வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சந்தை மதிப்பு :
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- பயிறு வகை பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் மணம் நிறைந்த சிவப்பு மென்கட்டையானது வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- சிவப்பு சாயம் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் எண்ணெய் எடுக்கவும் மற்றும் மருந்த தயாரிக்கவும் பயன்படுகிறது.
- இதன் மரம் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்தாக யான்படுகிறது.
- சிறப்புமிக்க திருப்பாச்சி பொம்மைகள் இம்மரத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
- இதன் மரம் அணு உலைகளில் கதிர் வீச்சுக்களை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- விக்ரா போன்ற ஊக்க மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- பழங்கள் டானிக்காக சீதபேதியை குணப்படுத்த பயன்படுகிறது.
- எண்ணெய் மேக வெட்டை நோயை குணப்படுத்த பயன்படுகிறது.
-->