கடம்பா
அறிவியல் பெயர் :
நியோலமார்கியா கடம்பா
பொதுப்பண்பு :
- அகன்ற அடிப்பகுதியை கொண்ட நேரான பெரிய இலையுதிர் மரமாகும்.
- இம்மரத்தின் அடிப்பகுதி மடிப்புமடிப்பாக காணப்படும்.
- இலைகள் தனித்தனியானது மற்றும் பூக்களானது சிறியது மற்றும் ஆரஞ்சு நிறமாக காணப்படும்
பரவல் :
வாழிடம் :
இம்மரம் வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் மற்றும் பகுதி பசுமைமாறா காடுகளிலும் அதிகம் வளர்கிறது.
மண் :
கடம்ப மரம் ஆழமான மற்றும் ஈர தன்மை கொண்ட செம்மண்ணிலும், வண்டல் மண்ணிலும் நன்நாக வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1300 மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
மலையளவு :
1500 - 5000 மி.மீ
வெப்பநிலை :
47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரம்
- மறுதாம்புகள் நன்கு தழைத்து வளரும் தனமை கொண்டது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- ஓளி, நிழல் மற்றும் வளமான மண் போன்ற சாதகமான சூழல் இருப்பின் நன்றாக வளரும் தன்மை கொண்டது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- முதிர்ந்து கீழே விழுந்த விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் சூரிய வெயிலில் உலர்த்தப்படப்படுகிறது.
- இதன் விதையுறையானது தண்ணீர் கொண்டு நீக்கப்படுகிறது.
- முறையாக காய வைக்கப்பட்ட விதைகள் உலர்ந்த இடத்தில் சேகரிக்கப்படுகிறது.
விதை நேர்த்தி:
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- நல்ல ஆற்று மணல் நிரப்பப்பட்ட மர தட்டுகளில் 0.1 கி அளவுள்ள விதைகள் விதைக்கப்படுகின்றன.
- விதையானது சுத்திகரிக்கப்பட்ட ஆற்று மணல் சேர்த்து விதைக்கப்படுகிறது.
- பிப்ரவரி மாதத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 0.2 கி விதைகள் என நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது.
- விதை முளைப்புத்திறன் அதிகமாகும்.
- விதைப்பதற்கு முன் தாய்பாத்தியை தண்ணீர் கொண்டு நன்கு ஈரப்படுத்த வேண்டும்.
- விதைகள் துவுதல் முறை மூலம் விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்தி தண்ணீர் இறைக்கப்படுகிறது. பின் வைக்கோல் கொண்டு தாய்பாத்திளை மூட வேண்டும்
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- முளைக்க துவங்கியவுடன் வைக்கோல் நீக்கப்படுகிறது.
- விதை முளைப்புதிறன் 60 – 90 சதவிகிதம் ஆகும்.
- 5 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது. மறுநடவு செய்யப்பட்வுடன் நிழல் அவசியமாகும்.
- வெப்பமண்டல பகுதிகளில் இதன் வளர்ச்சி மிக அதிகமாகும்.
- Fruits are collected from the ground and heaped under shade and allowed to rot for 3-4 days.
- Pulp is washed off by hand in a bucket of water.
- Seeds sink to the bottom and are separated and dried.
- Properly dried seeds are stored in a dry place for about a year.
- Pre sowing treatment is not required.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை அதிகம் பெய்யும் இடங்களில் மரத்திற்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- அதிக சுற்றளவு கொண்ட மரம் தேவைப்படுமேயானால் மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும்.
வேளாண்காடுகள் :
- அதிக மகசூல் கிடைக்க வேண்டுமெனில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- மரம் வளர்ந்த பின் வேளாண் பயிர்களையும் மாற்றி பயிரிட முடியும். இஞ்சி, மஞ்சள் போன்ற வேளாண் பயிர்களும், அன்னாச்சி மற்றும் பருப்பு வகைகளும் பயிரிடலாம்.
- இம்மரம் விவசாய நிலங்களின் வரப்போரங்களில் நட பயன்படுகிறது.
- களைகளை நீக்குதல் மற்றும் பக்க கிளைகளை நீக்குதல் போன்ற பணிகளை ஒரு குறிபிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
சந்தை மதிப்பு :
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் ஒட்டுப்பலகைகள் தயாரிக்கவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது.
- தீக்குச்சி மற்றும் பென்சில் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் மரம் உள் கட்டுமான பணிகளுக்கு மற்றும் பெட்டிகள் தயாரிக்கவும் மற்றும் சிற்பங்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.
தீவனம்:
- இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
-
உணவு:
- பூக்கள் மற்றும் பழங்கள் உண்ணக்கூடியவை.
தீவனம்:
- இலைகள் மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
-->