சப்போட்டா
அறிவியல் பெயர் :
மணில்காரா சப்போட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டையானது அடர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் சுருள் வடிவில் அமைந்திருக்கும் மற்றும் கொத்தாக அமைந்திருக்கும்.
- பூக்கள் பச்சை நிறமுடையது.
- காயானது வட்டமானது மற்றும் பெர்ரி வகையை சேர்ந்தது.
பரவல் :
வாழிடம் :
வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டல காடுகளில் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண் மற்றும் கார தன்மை கொண்ட மண்ணிலும் அதிகமாக வளரும்.
மண் pH :
5.5-8.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1250 – 2500 மி.மீ
வெப்பநிலை :
30 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- ஒட்டு முறை, கட்டுசெடி வளர்ப்பு மற்றும் மற்ற உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.