கரும் பொரசு, பொரசு, முதிரை, புருஷ்
அறிவியல் பெயர் :
குளோரோசைலான் ஸ்வீட்டீனியா
பொதுப்பண்பு :
- சிறிதிலிருந்து நடுத்தர அளவுடைய இலையுதிர் மரம், சிறிய மற்றும் வளைந்த தண்டுடன் பறந்து விரிந்த மரக்கூரைப் பகுதியுடையது.
- அடிமரம் 3 மீட்டர் அளவும், 1.5மீட்டர் சுற்றளவுடனும் காணப்படுகிறது.
- அதிகபட்ச அளவாக இலங்கையில் 2.7மீ சுற்றளவை எட்டியுள்ளது.
பரவல் :
பீகார், இந்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது.
வாழிடம் :
ஈரப்பதமுடைய இலையுதிர் காடுகள்.
மண் :
ஆழமற்ற மண்.
மண் pH :
6.5 - 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
450 மீ வரை
மலையளவு :
1250 - 1500மி.மீ.
வெப்பநிலை :
35 செல்சியஸ் - 47.5 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளிப்பகுதி / மலைப்பகுதி
மரப்பண்பு :
பனியை தாங்கி வளராது. மறுதாம்பு வளரும் தன்மை உடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
15 மீட்டர்
இயற்கை மறு உருவாக்கம்:
மழைக்காலங்களில் விதை முளைப்பு நடைபெறுகிறது.
செயற்கை மறு உருவாக்கம்:
விதை, மரக்கன்று, பக்கக்கன்றுகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
இனப்பெருக்கம்
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
கனிகள் வெடித்த பின் விதை சேகரிப்பு செய்யலாம். கனிகள் சூரிய ஒளியில் நன்கு வெடிக்கும் வரை உலர்த்தப்படுகிறது. விதைகள் சணல் பை அல்லது மூடிய தகர பெட்டியில் சேமிக்கப்படுகிறது.
முளைப்புத்திறன்: 69%
மரப்பண்ணை தொழில்நுட்பம்:
- கடும்வெயில் மற்றும் மழைப்பொழிவில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நிழல் உள்ள பாத்தியில் ஜுன் - ஜுலையில் விதைக்கப்படுகிறது.
- விதைகள் சிறிது மணல்கொண்டு மூடப்படுகிறது. விதை முளைப்பு இரண்டு வாரங்களில் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் முடிவடைகிறது. பூவாலி கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைந்த அளவு நீர் தெளிக்கப்படுகிறது. களையெடுத்தல் அவசியம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு தொழில்நுட்பம்:
நேரடி விதைப்பு:
- 3 மீட்டர் இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- மரக்கன்றுகள் நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
- களை எடுக்காமல் விதைப்பது முழுவதுமாக பயிர் சேதத்தை ஏற்படுத்தும்.
அடிமரத்துண்டு நடவு:
ஒரு வருட மரத்தண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. தண்டுகள் 12செ.மீ - 18செ.மீ விட்டம் உடையதாகவும், 4செ.மீ நீளம் உடையதாகவும், 23-30செ.மீ வேர் நீளம் உடையதாகவும் இருக்க வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்:
- மரங்கள் காட்டுத்தீயால் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகிறது.
- புழு மரக்கட்டையை துளைத்தும், வண்டுகள் உயிருள்ள தண்டுகளை துளைத்தும், தண்டு துளைப்பான்கள் தண்டுகளை துளைத்தும், மற்ற பூச்சிகள் சாறுருஞ்சியாகவும் மற்றும் இலைகளை உண்டும் சேதப்படுத்துகின்றன.
முக்கிய பயன்கள் :
- மேசை, நாற்காலிகள் செய்யப்பயன்படும் வழவழப்பான மரவகை, பொன்நிறமான பிரகாசமான மரக்கட்டை.
- சிறிய ஆடம்பர பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
- மரக்கட்டை பதப்படுத்தும் போது, சிறிது வெடிப்புகள் ஏற்படுகிறது.
- நிலைத்து வாழக்கூடிய தன்மை உடையது.
- பாலம், வீட்டுக்கட்டுமானம், விவசாய உபகரணங்கள், ஆரங்கள், கணைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது.