சீதாபழம்
அறிவியல் பெயர் :
அனோனா ஸ்கோமோசா
பொதுப்பண்பு :
- 3 – 7 மீ உயரம் வரை வளரக்கூடிய சிறிய அலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை வெளிர் சாம்பல் நிறமுடையது.
- இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
அனைத்து மண்வகைகளுக்கும் நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வளம் பொருந்திய செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 ம.மீ க்கு மேல்.
வெப்பநிலை :
41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
பசுமைமாறா மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- சாதகமான சூழலில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
செயற்கை மறு உருவாக்கம்:
- விதைகள் மூலமாகவும், உடல இனப்பெருக்கம் மூலமாகவும் பெருக்கம் செய்யலாம்.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையின் விதையுறையை நீக்கி விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- நிழலில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 1000 - 1500 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 90-95 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி:
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- நாற்றானது விதைகள் அல்லது உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 20 – 30 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியில் எரு, சூப்பர்பாஸ்பேட் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு அடங்கிய கலவை இடப்படுகிறது.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 4 x 4 மீ, 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- தகுந்தளவு ஈரப்பதத்தை மரமானது காய்க்கும் வரை கொடுக்க வேண்டும்.
- 3 வருடத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் பழம் தோராயமாக 12000 – 13000 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- ஐஸ்கிரீம் தயாரிப்பில் நிறமியாக பயன்படுகிறது.
- இதன் 50 – 80 சதவிகித பழங்கள் உணவிற்காக பயன்படுகிறது.
- இதன் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மருந்தாக பயன்படுகிறது.
- எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.
- இலைகள், செடியின் வேர்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை.
- இவை வலிநிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
-->