பொன் மூங்கில்
அறிவியல் பெயர் :
பேம்பூசா வல்காரிஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய மஞ்சள் நிறமுடைய மூங்கில்.
- இம்மூங்கிலுக்கு முட்கள் கிடையாது.
- தண்டுகள் பச்சை நிற கோடுகளுடன் காணப்படும்.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
ஈரமான, நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் அல்லது களிமண் மற்றும் வண்டல் மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. உவர்நிலம் மற்றும் நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
4.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
13 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
நீர் தேங்காத நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
- மலைச்சரிவு ஏற்படும் பகுதிகளில் ஓரளவு தங்கி நிற்கும் தன்மையுடையது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இம்மூங்கில் விதைகள் மற்றும் கிழங்கு மூலம் இயற்கையாக பெருக்கமடைகிறது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மூங்கில் அரிதாக பூக்கும் தன்மையுடையது. ஆனால் களிகள் நன்கு தழைத்து வளரும் தன்மையுடையது.
- குளிர் நீரில் விதைகள் 24 மணிநேரம் ஊர வைக்கப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. சேம்மண் தாய்பாத்தி நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
- 1.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்ட விதைகள் 10 – 20 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 3 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு பருவம் :
- மழை பருவம் துவங்கும் முன் நடவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீர் பாய்ச்சமுடியும் என்ற நிலையில் வெயில் குறைந்த தருவாயில் நடவு பணிகள் மேற்கொள்ளலாம்.
- நடவிற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் :
- நடவுபணி மேற்கொள்ளப்படவுள்ள நிலத்தை சுற்றி முன்னதாகவே வேலியமைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு முன்னதாகவே வேலியமைக்க வேண்டும்.
- நடவிற்கு 15 நாட்கள் முன்னதாகவே களைகளை நீக்க வேண்டும்.
குழியளவு மற்றும் நேர்த்தி செய்தல் :
- 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகள் மூங்கில் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழிகளை வெயிலில் உலர்த்துவதற்காக முன்னதாகவே அமைக்கப்பட வேண்டும்.
நடவு தொழில்நுட்பம் :
- ஒரு வருடமான நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- பருவ மழைக்கு முன்னதாகவே குழிகளை அமைத்து கொள்ள வேண்டும். குழிகள் போதுமான அளவு ஈரப்பதம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
- நடப்பட்டபின் குழிகளை மேற்மண்ணை கொண்டு மூடவேண்டும்.
இடைவெளி :
- 5 x 5 மீ இடைவெளி மூங்கில் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- மூங்கிலுக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால் நாற்றங்காலிலும், நடப்பட்ட பின்பும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
- கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பராமரிப்பு பணிகளில் ஒன்றாகும்.
- 5 வருடங்கள் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மூங்கில் தோராயமாக 4000 – 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
தண்டு:
- தண்டுகள் கூடை செய்யவும், ஏணிகள் மற்றும் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகின்றன.
- இளம் குறுத்து உணவாக பயன்படுகிறது.
- களிகள் காகிதம் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- பாலம் அமைக்க, மரச்சாமான்கள் செய்ய, படகு கட்டுமானத்திற்கு, வேலியமைக்க மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் தண்டு கொசுக்களை விரட்ட எரிக்கப்படுகிறது.
- இதன் தண்டு வாழை தோட்டங்களில் தாங்கு குச்சாக பயன்படுத்தப்படுகிறது.
வேளாண்காடுகள்:
- சரிவான மற்றும் நீர் ஓடைப்பகுதிகளில் மண் அரிமானத்தை தடுக்க மற்றும் வரப்போர நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.