தைல மரம்
அறிவியல் பெயர் :
யூகாலிப்டஸ் டெரிட்டிகார்னிஸ்
பொதுப்பண்பு :
- யூகாலிப்டஸ் டெரிட்டிகார்னிஸ் 45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரமாகும்.
- ஆகன்ற கிளைகளையுடையது
- பட்டையானது வெண்மையாகவும், சமதளமாகவும் காணப்படும்.
- கிளைகள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் கலந்த பச்சை நிறமுடையது.
பரவல் :
- இந்தியாவில் தேக்குக்கு அடுத்தப்படியாக இம்மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
- இந்தியாவிலுள்ள காடுகள், விவசாய நிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.
வாழிடம் :
இலையுதிர்க் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
வண்டல் மண் மற்றும் களிமண்ணில் அதிகம் வளர்கின்றது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீட்டர் வரை வளரக்கூடியது.
மலையளவு :
500-1500 மில்லி மீட்டர்
வெப்பநிலை :
12 – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
- வலிமையான ஒளி விரும்பி, மரம் நன்கு வளர அதிக ஒளி அவசியமாகும்.
- நீண்ட வறட்சியை தாங்கும் மற்றும் அதிக நீர் தேங்கும் பகுதிகளிலும் நன்கு வளரும்.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- மறுதாம்பு முறை மற்றும் விதைகள் மூலம் நன்கு வளரக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- இளம் பருவத்தில் தரமான விதைகள் கிடைக்கிறது.
- விதையானது மே – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 230 - 350 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 30 -80 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி:
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- பிப்ரவரி – மார்ச் மாத இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
- ஒரு சதுர மீட்டர் தாய்பாத்திக்கு 75 – 100 கிராம் விதைகள் தேவைப்படும்.
- விதைக்கப்பட்டவுடக் தாய்பாத்தி மணல் கொண்டு லேசாக மூடப்படுகிறது.
- தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
- 10 - 15 தினங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்ந்த பிறகு தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு நாற்றுகள் மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ மற்றும் 3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.
- 10 – 20 செ.மீ உயரத்திற்கு ஆமல் வளரும் மறுதாம்புகள் வளர அனுமதிக்கப்பட வேண்டும்.
- அறுவடை செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் மறுதாம்பு வளர்கிறது.
- தேவையற்ற மறுதாம்புகள் முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில் நீக்க வேண்டும்.
- குறுகிய சுழற்சி கொண்ட மரங்கள் 5 – 6 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
- மரக்கூலுக்காக 10 – 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
- மின்சக்தி உற்பத்திக்கு முதிர்ந்த மரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சந்தை மதிப்பு :
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரக்கட்டை கட்டுமானத்தொழில் மற்றும் சுரங்கத்தொழிலுக்கு பயன்படுகிறது. மேலும் கம்பம், மரப்பெட்டிகள், கப்பல்துறை, மேடை ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
- இவை ஒட்டுப்பலகை தயாரிப்பிலும் அதிகமாக பயன்படுத்தப்படகிறது.
அத்தியாவசியமான எண்ணெய்:
- எண்ணெய் எடுப்பதற்கு இலை முக்கிய ஆதாரமாகப் பயன்படுகிறது. சினியோல் 45% உள்ளது.
- இலையில் 0.9 - 1.4% எண்ணெய் உள்ளது. மரக்கட்டையில் 0.5% அத்தியாவசிய எண்ணெய் உள்ளது.
டேனின் அல்லது சாயப்பொருட்கள்:
- மரக்கட்டையில் 6-12% டேனின் உள்ளது. பட்டையில் 3-5% டேனின் உள்ளது.
எரிப்பொருள்:
- இது விறகு மற்றும் மரக்கரிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
-->