இருள் மரம்
அறிவியல் பெயர் :
சைலியா சைலோகார்பா
பொதுப்பண்பு :
- இது ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்.
- இம்மரத்தின் பட்டை சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- மலர்கள் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது. மலர்கள் மணமானது.
- நெற்றுகள் வெளிர் சாம்பல் நிறமுடையது. நெற்றில் 6 – 7 சாம்பல் நிற விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
செம்பொறை மண் மற்றும் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
மண் pH :
4.5-5.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
37 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3300 - 4400 விதைகளிருக்கும்.
- விதைகளின் முளைப்புத்திறன் 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 30 – 95 சதிவிகிதமாகும்.
- நாற்றுகள் காயமாகாதவண்ணம் உற்பத்தி செய்ய வேண்டும். வேர்கள் அறுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
- நேரடி விதைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
- விதைகளானது 2 மீ இடைவெளியில் 3 மீ வரிசை இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
- 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் மரப்பயன்பாடுகளுக்கும், இரயில் தண்டவாள கீழ் படுக்கையாகவும் பயன்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பாலம் அமைக்கவும், கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுகிறது.