விளா மரம்
அறிவியல் பெயர் :
லிமோனியா அசிடிசீமா
பொதுப்பண்பு :
- சிறிய இலைகளை கொண்ட பெரிய இலையுதிர் மரமாகும்.
- பூக்கள் சிறியது மற்றும் அதிக எண்ணிக்கையிலானது.
- பழம் பெர்ரி வகையை சேர்ந்தது. மேற்தோல் கடினமானது. தோலினுள்
- சாம்பல் நிற விதைகள் கொலகொலப்பாக நிறைந்திருக்கும்.
- இம்மரம் வளம் குறைந்த அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.
- இம்மரம் ஒரு சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
- இதன் இலைகள் சிவபெருமான் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பரவல் :
- இந்தியா முழுவதும் பரவிக்காணப்படும் மரமாகும்.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மித வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
450 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
800 – 1200 மி.மீ
வெப்பநிலை :
20 - 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
கடல் மட்ட உயரம் குறைவாகவுள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
- நாற்றங்காலில் உடல இனப்பெருக்கம் மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
- விதைகளை 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
- வேர் வெட்டுத்துண்டுகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- மொட்டுகள் மூலம் நாற்று உற்பத்தி மற்றும் ஒட்டு முறை மூலம் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மெட்டுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றிற்கு 8 x 8 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
- விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றிற்கு 10 x 10 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
- குழியின் அளவு 80 - 90 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இந்தியாவில் பிப்ரவரி – மார்ச் அல்லது ஜுலை – ஆகஸ்ட் மாத கால
- இடைவெளியில் விளா மரம் பயிரிடப்படுகிறது.
மேலாண்மை:
- முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர்பாசனம்.
- பயிர் களைதல் மற்றும் மறு நடவு போதுமான பயிர் எண்ணிக்கையை உறுதி செய்ய அவசியமானது.
- மெட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 5 வருடத்தில் காய்க்க துவங்குகிறது.
- விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 8 வருடத்தில் காய்க்கவல்லது.
முக்கிய பயன்கள் :
- இதன் காய் உண்ணக்கூடியதாகும்.
- காய் செரிமானத்தை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- காய் இதய சம்மந்மதான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- காயினுள் இருக்கும் கொலகொலப்பான கூழ் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுகிறது.