வேங்கை
அறிவியல் பெயர் :
டிரோகார்பஸ் மார்சுபியம்
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் வாசனை மிகுந்தது மற்றும் மஞ்சள் நிறமுடையது.
- நெற்றானது தட்டையாக காணப்படும் மற்றும் ஒரு நெற்றுக்கு ஒரு விதைகள் என காணப்படும் மற்றும் சிவப்பு நிறமாக காணப்படும்.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் வளர்கின்றது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 – 1400 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000-1500
வெப்பநிலை :
25 – 35 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
- குறைந்தளவு பனி மற்றும் வறட்சியை தாங்கக்கூடியது.
- தீ பாதிப்பை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
வறண்ட இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- 2 – 3 வருடமான மரங்களிலிருந்து தரமான விதைகள் சேகரிக்கப்படுகிறது
- நெற்றானது பிப்ரவரி - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோவில் 1600 நெற்றுகள் இருக்கும்.
- நெற்றிலிருந்து விதைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை 9 – 12 மாதங்கள் வரை சேமிக்கலாம்.
- விதை முளைப்புத்திறன் 80 - 60 சதவிகிதம் ஆகும்.
முன்நேர்த்தி:
- விதைகளை விதைப்பதற்கு முன் சான கரைசலில் 48 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு பிப்ரவரி – மார்ச் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதையானது 20 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 8 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- பூவாளி கொண்டு தினமும் நீர்பாய்ச்ச வேண்டும்.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது. இந்நாற்றுகள் 23 செ.மீ வரை உயரமிருக்கும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- நாற்றை சுற்றி வேலியமைத்தல் அவசியமாகும்.
சந்தை மதிப்பு :
- ஒரு சதுர அடி மரம் 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.
- இதன் மரம் கதவு மற்றும் ஜன்னல் செய்ய, தூண்கள் அமைக்க, வேளாண் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் பட்டை கினோ பசை என்ற பசையை தரவல்லது. இப்பசை மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- சாயங்கள் தயாரிக்க மற்றும் டானின் எடுக்க இம்மரம் பயன்படுகிறது.
கோந்து:
- கணையத்தில் இன்சுலின் உற்பத்திக்கு காரணமான பீட்டாசெல்களை உற்பத்தி செய்ய கோந்து மிகவும் பயன்படுகிறது.
- எரிபொருளாகவும் பயன்படுகிறது. மற்ற மரக்கட்டைகளுடன் சேர்த்து மரக்கூழ் செய்து காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
-->