நொச்சி மரம்
அறிவியல் பெயர் :
வைடெக்ஸ் நெகுண்டோ
பொதுப்பண்பு :
- பெரிய இலையதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
- காயானது டுரூப் வகையை சேர்ந்தது மற்றும் இளச்சிவப்பு நிறம் கலந்த கருப்பு நிறமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுதும் அதிகம் வளர்கின்றது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5-6
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
600 – 2000 மி.மீ
வெப்பநிலை :
37 - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- பழுத்த காயானது ஜுன் – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயின் மேல் தோழானது நீக்கப்படுகிறது.
- தோழ் நீக்கப்பட்ட காயானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் குறைந்த நாட்களுக்கே முளைப்புத்திறன் கொண்டது.
- விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- அதிகப்படியான களிமண் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- விதைகள் தரம் பிரிக்கப்பட்டு, பெரிய விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் பைக்கு 2 விதைகள் வீதம் விதைக்கப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- நடவு பணிகள் துவங்கப்படுவதற்கு முன் நிலமானது உழப்பட வேண்டும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- இம்மரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் வேர் பலவேறுபட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக தோல் நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், ருமாட்டிக் மூட்டுவலி, முதுகு வலி மற்றும் வளைவு புழுக்கள் காதிப்பிற்கு மருந்தாக பயன்படுகிறது.