புங்க மரம்
அறிவியல் பெயர் :
மில்லேட்டியா பின்னேட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டை மென்மையானது மற்றும் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் பளபளப்பான அடர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் சிறியது மற்றும் இளஞ்சிவப்பு கலந்த வெள்ளை நிறமுடையது.
- நெற்று கடினமானது மற்றும் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
- ஒவ்வொரு நெற்றிலும் ஒரு சிவப்பு நிற விதையிருக்கும்.
பரவல் :
- இம்மரம் இந்தியாவின் அனைத்துபகுதிகளிலும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2500 மி.மீ
வெப்பநிலை :
27 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 800 - 1400 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 – 90 சதிவிகிதமாகும்.
- விதைகள் நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
- பாலித்தீன் பைகள் தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. ஒரு மாத முடிவில் அனைத்து விதைகளும் முளைத்து விடுகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்று அல்லது 6 மாதமான நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 45 - 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இளம் நாற்றுகளுக்கு நீர் அவசியமாகும். எனவே அவ்வப்போது நீர் பாய்ச்ச வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 – 3 வருடங்கள் 2 – 3 முறை களையெடுத்தல் அவசியமாகும்.
- அலங்கார மரமாக வளர்க்கப்படும் மரங்களுக்கு அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
- 4 - 7 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் வளமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மையுடையது.
- இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உயிர் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- இலைகள் கால்நடை தீவனமாக பயன்படுகிறது.
- இதன் மரம் மர பயன்பாடுகளுக்கும், விறகிற்காகவும், தீவனமாகுவம் மற்றும் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவம் பயன்படத்தப்படுகிறது.