கரு மருது
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா எலிப்டிகா
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரம்.
- இம்மரம் 32 மீ உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது.
- இதன் பட்டை நீண்ட நார்களை கொண்டது. மேலும் மரப்பட்டை சாம்பல் கலந்த கருப்பு நிறமுடையது.
- இலைகள் வட்ட வடிவமடையது.
- பூக்கள் சிறிய வெளிர் மஞ்சள் நிறமுடையது. இவை ஒரு குழுமமாக காணப்படும். பூக்கள் இலையடிப்பகுதி மற்றும் குறுத்தில் பூக்கக்கூடியது.
- காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது. 5 இறகு போன்ற அமைப்புகளை கொண்டது. காய் 5 செ.மீ நீளமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாகக் பொண்டது.
வாழிடம் :
வெப்பமண்டல ஈர மற்றும் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
ஈரமான, நீர் தேங்காத வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 - 1900 மி.மீ
வெப்பநிலை :
20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் நீர் ஓடும் நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரும் மரமாகும்.
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மற்றும் மறுதாம்பு மூலம் இனப்பெருக்கமடைகிறது.
- இம்மரம் நீர் நிலை பகுதிகளில் பரவலாக வளரும்.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருட வருடம் அளவுக்கததிகமாக காய்க்கவல்லது.
- பழுத்த காயானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 14 – 15 விதைகளிருக்கும்.
- இதன் விதைகள் சாதாரணமாக 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 1 நிமிடம் ஊர வைக்கப்பட்டு பின் குளிர் நீரில் 48 மணி நேரம் ஊரவைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
- விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 2 - 3 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.
- 16 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன் சாம்பல் நிறமுடைய மரம் உறுதியானது. எனவே இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்கும், வேளாண் உபகரணங்களும், மின் கம்பங்கள் அமைக்கவும் மற்றும் ஒட்டுப்பலகைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- அலங்கார மரமாகவும் வளர்க்கப்படுகிறது.