பெருங்கொன்றை மரம்.
அறிவியல் பெயர் :
பெல்டோப்போரம் டிரோகார்ப்பம்
பொதுப்பண்பு :
- 15 – 25 மீ உயரம் வரை வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். மரத்தின் சுற்றளவு 1 மீ வரை வளரக்கூடியது.
- பூக்கள் மேல்நோக்கியிருக்கும் வண்ணம் குழுமமாக அமைந்திருக்கும். பூக்கள் மஞ்சள் நிறமுடையது.
- இதன் பூக்கள் இரவு நேரங்களில் மணம் கமலக்கூடியது.
- வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. மார்ச் - மே மற்றும் செப்டம்பர் - நவம்பர் ஆகிய இரு பருவங்களில் பூக்கவல்லது.
- விதை நெற்றானது மெல்லியது மற்றும் இறகு போன்ற வடிவமுடையது. இளம் பருவத்தில் நெற்று சிவப்பு நிறமாகவும் முற்றியபின் கருப்பு நிறமாகவும் மாற்றமடைகிறது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இம்மரம் இயற்கையாகவே பரவிக்காணப்படும்.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது. உவர்நிலங்கள், கடினமான மண்ணிலும் மற்றும் களிமண்ணிலும் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1600 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
சராசரி மழைப்பொழிவுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.
வெப்பநிலை :
27 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
கடலோர காடுகள் மற்றும் அலையாத்தி காடுகளில் அதிகமாக வளரும்.
மரப்பண்பு :
- ஓரளவு பனியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு மற்றும் மர உபயோக பொருட்கள் தயாரிக்காக பயன்படுத்தப்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் தேனீ வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இதன் பட்டையிலிருந்து டானின் எடுக்கப்படுகிறது. டானின் பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் சாயம் துனிகளுக்கு சாயமூட்ட பயன்படுகிறது.
- இம்மரம் காப்பி மற்றும் கொக்கோ தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது.