நீர் கடம்ப மரம்
அறிவியல் பெயர் :
மித்ரகைனா பார்விபுளோரா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது. இலைகளின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடும்.
- பூக்கள் மணமுடையது மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
- இதன் விதை பந்தானது வட்ட வடிவமுடையது மற்றும் எண்ணற்ற விதைகளை கொண்டது. விதைகள் வெளிர் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக ஆழமான மற்றும் நீர் தேங்காத மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 - 7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
875 – 3250 மி.மீ
வெப்பநிலை :
20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- நீர்தேங்கியிருக்கும் நிலப்பகுதியிலும் வளரும் தன்மை கொண்டது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- பழுத்த காயானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயானது வெயிலில் உலர்த்தப்பட்டு விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 10000 விதைகளிருக்கும். விதைகள் சிறிய அளவுடையது.
- விதை முளைப்புத்திறன் 50 – 60 சதிவிகிதமாகும்.
- தாய்பாத்தியில் விதைகள் நேரடியாக தூவுதல் முறையில் விதைக்கப்படுகிறது.
- விதைகளை மணல் மற்றும் சாம்பல் கலந்து விதைப்பது சிறந்ததாகும்.
- விதைக்கப்பட்ட விதைகள் மணல் கொண்டு மூடப்பட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- இரண்டு இலைகள் கொண்ட நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிறகு பயன்படுத்தபடுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது ஜுலை – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று வளர்ச்சிக்கு உதவுகிறது.
- 20 – 35 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 1300 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மரச்சாமான்கள், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- இதன் இலை அதிகளவு டானின் கொண்டது.
- இதன்மரப்பட்டையானது நார் தயாரிக்க பயன்படுகிறது.