முள்இலவம் பஞ்சுமரம்
அறிவியல் பெயர் :
பாம்பக்ஸ் சீபா
பொதுப்பண்பு :
- இவை உயரமான படர்ந்து வளரக்கூடிய கிளையினை உடைய மரங்கள். சராசரியாக 25 மீட்டருக்கு மேல் வளரக்கூடியவை.
- நீண்ட நேரான மரங்கள் இளம் பருவத்தில் அதிக முட்களை உடையதாக காணப்படுகின்றன.
- இவை பொதுவாக காடுகள் மறு உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
பரவல் :
வெப்ப மண்டல ஆசியா மற்றும் கினியா
வாழிடம் :
வெப்பமயமான, உலர் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் மற்றும் புல்வெளிப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.
மண் :
சரளை மண் வகை
மண் pH :
5.5 - 7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1400மீ
மலையளவு :
500 -750மி.மீ
வெப்பநிலை :
37.5 – 50 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளிப்பகுதி
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
25மீ
இயற்கை பெருக்கம்:
செயற்கை பெருக்கம்:
பயிர்பெருக்கம்:-
- விதை சேகரிப்பு: காய்ந்த நெற்றிலிருந்து விதைகள் பெறப்படுகின்றது.
விதை நேர்த்தி:
- 12 மணி நேரம் விதையானது நீரில் ஊறவைக்கப்படுகிறது.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- 5X23செ.மீ இடைவெளியில் ஊன்றப்பட்டு ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் வரை வளர்க்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு முறையில் 7.4மீ X 7.4மீ இடைவெளியிலும் அதிக மழை பெரும் பகுதிகளில் முழு விதைப்பு முறையிலும் நடப்படுகிறது.
நோய்கள் மற்றும் பூச்சிகள்:
- முதல் இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் மிக அவசியம்.
- பலவகை லார்வாக்களின் தாக்குதலுக்கு உட்படலாம்.
- குறிப்பாக டானிகா நெவிபெரனா அதிக ஆபத்தை விளைவிக்கும்
முக்கிய பயன்கள் :
மருத்துவப் பயன்கள்:
- இதன் மலர்கள் புத்துணர்வூட்டியதாகவும், சரும நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.
- இளம் வேர்கள் இருமல், சிறுநீரக கோளாறுகள், வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுகின்றது.
- இலைகள் உயர் ரத்த அழுத்தத்திற்கும,; பசியின்னைக்கும் மருந்தாக பயன்படுகின்றன.