கருவாகை
அறிவியல் பெயர் :
அல்பைசியா ஓடோரட்டிசீமா
பொதுப்பண்பு :
- அடர் பச்சை கிளைகளையுடைய சராசரி அளவுடைய பெரிய மரமாகும்.
- இதன் மரம் வெளிர் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
- நெற்றானது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- ஒரு நெற்றில் 8 – 12 விதைகளிருக்கும்.
பரவல் :
- இம்மரம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பொதுவாக மலைச்சரிவுகளில் அதிகம் வளர்கிறது.
வாழிடம் :
வறண்ட மற்றும் ஈர இலையுதிர் காடுகளில் இயற்கையாக வளரும் தன்மை கொண்டது.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட மண், உப்புதன்மை குறைவான உவர்நிலங்களிலும், களிமண்ணிலும், செம்பொறை மண்ணிலும் மற்றும் கரிசல் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
640 – 3000 மி.மீ
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
- மறுதாம்பு முறை மூலம் நன்கு தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- இவை இயற்கையாக விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- நெற்றானது ஏப்ரல் - மே மாதத்தில் முற்றிவிடும். எனவே ஏப்ரல் - மே மாதங்களில் நெற்றுகள் சேகரிக்கப்படுகிறது.
- நெற்று வெயிலில் உலர்த்தப்பட்டு விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சுத்தப்படுத்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட இடங்கள் நெற்று காய வைப்பதற்கு ஏற்றதாகும்.
- ஒரு கிலோ விதையில் 15000 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 47 சதவிகிதம் ஆகும்.
- ஒரு கிலோ விதையில் குறைந்தது 7255 நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.
விதை நேர்த்தி
- குளிர்ந்த நீரில் 24 மணிநேரம் ஊர வைக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதையானது நேரடியாக தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
- பொதுவாக ஏப்ரல் மாதம் தாய்பாத்தி விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாள் முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- நாற்றானது 15 – 30 செ.மீ அளவு வளர்ந்தவுடன் வளர் இடுபொருட்களடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- களைகளை நீக்குவதால் நாற்றின் வளர்ச்சி சற்று துரிதமாக இருக்கும்.
- விதைகளை நேரடியாக பாலித்தீன் பைகளிலும் விதைக்கலாம்.
- 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு:
- நேரடி விதைப்பு முறையில் விதைகளானது 1.5 செ.மீ இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- நேரடி விதைப்பிற்கு ஜுலை – செப்டம்பர் மாதம் உகந்ததாகும்.
- வறண்ட நிலப்பகுதி மற்றும் குறைவான மழையளவு உள்ள பகுதிகளுக்கு இம்முறை ஏற்றதல்ல.
நாற்று நடவு முறை :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- ஜுலை மாதத்;தில் நடவு பணிகள் மேற்கொள்வது சிறந்ததாகும்.
- வறண்ட நிலப்பகுதியில் குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- முதலாம் ஆண்டில் மூன்று முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
- இரண்டாம் ஆண்டில் இரண்டு முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
- 15 – 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3700 - 4000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- தேயிலை மற்றும் காபி பயிர்களை ஊடுபயிராக பயரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுகிறது.
- மேலும் உள் கட்டுமான பணிகளுக்கு இதன் மரம் பயன்படுகிறது.
- தூண்கள், மாட்டுவண்டியின் பாகங்கள், வேளாண் உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- அலங்கார மாமாகவும் பயன்படுகிறது.
- இலைகள் பசுந்தீவனமாக பயன்படுத்தலாம்.
- இது சாலை ஓரமாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது.
-->