வெள்ளை அத்தி மரம்
அறிவியல் பெயர் :
பைகஸ் ரெசிமோசா
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளுடன் கோணலான கவர்ந்திழுக்கும் மரமாகும்.
- மரப்பட்டை வெண்மை கலந்த சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது. இலைகளின் மேல் சிறிய உரோமம் போன்றவை வளர்ந்து காணப்படும்.
- பூக்கள் சிவப்பு நிறமுடையது மற்றும் அதிக எண்ணிக்கையில் பூக்கக்கூடியது.
- சிவப்பு வண்ண அத்திப்பழங்களை கொண்டது இம்மரத்தின் சிறப்பம்சம் ஆகும். இப்பழங்கள் சிறியதாகவும், பல பழங்கள் சேர்ந்து ஒரு குழுமமாகவும் காணப்படும்.
- காய்கள் அத்தி வகையை சேர்ந்தது. அதிக எண்ணிக்கையிலான அத்தி ஒரு குழுமமாக சேர்ந்து காணப்படும். காயினுள் எண்ணற்ற விதைகள் ஒரு குழுமமாக இணைந்திருக்கும்.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
குறைந்த கடல் மட்ட உயரம் கொண்ட அனைத்து வகையான காடுகளிலும் வளரும் தன்மையுடையது.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் மரமாகும்.
மண் pH :
5-8.3
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 5000 மி.மீ
வெப்பநிலை :
16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
- பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
- நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
- மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
நீர்ப்பாசனம் :
- முதல் 2 வருடங்கள் அவசியம்.
- 30 – 45 வருடங்களில் அறுவடை செய்யலாம்.
முக்கிய பயன்கள் :
உணவு :
- அதன் காய்கள் வறண்ட பஞ்ச காலத்தில் உணவாக பயன்படுத்தப்பட்டது.
கால்நடை தீவனம் :
- இம்மரத்தின் இலைகள் யானை, ஒட்டகம், ஆடு மற்றும் கால்நடைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீவனமாகும்.
- இலைகளில் 10 – 14 சதவிகித புரோட்டீன் உள்ளது. இவை எளிதாக மெல்லக்கூடியதாகவும், செரிமானமடையக்கூடியதாகவும் உள்ளதால் விலங்குகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.
எரிபொருள் :
- இம்மரம் ஒரு சிறந்த எரிபொருளாகும்.
மரம் :
- இம்மரம் ஓரளவு வலிமையானதாகும்.
- இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள் தயாரிக்க, கரண்டி தயாரிக்க மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.
- மரப்பட்டைகளில் படிகப்பொருட்கள் உள்ளன.
- இம்மரப்பாலில் நீர் தாங்கும் காகிதம் மற்றும் இரப்பர் தயாரிக்கப் பயன்படும்.
-->