ஆயா மரம்
அறிவியல் பெயர் :
ஹோலோப்டீலியா இன்டகிரிபோலியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் பச்சை நிறமுடையது.
- மலர்கள் இருபால் தன்மையுடையது, ஓரு குழுமமாக அமைந்திருக்கும்.
- முதிர்ந்த பின் சாம்பல் கலந்த மஞ்சள் நிறமுடையது.
- காய்கள் வட்டவடிவமுடையது மற்றும் ஒரே ஒரு விதையை கொண்டது.
- விதைகள் சிறியது, வெண்மையானது மற்றும் சிறுநீரக் வடிவமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
நீர் தேங்காத தன்மையுள்ள ஆழமான செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5 – 8.3
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1650 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
800 – 2500 மி.மீ
வெப்பநிலை :
10 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் காற்றின் மூலமாக பரவி இனப்பெருக்கமடையக்கூடியது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் உலர்த்தப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 27000 விதைகளிருக்கும்.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளில் விதை முளைப்புத்திறன் 60 சதிவிகிதமாகும்.
- சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் மேற்கொள்வது சிறந்தது.
- விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. ஒரு மாத முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- நாற்றுகள் வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் 10 கிராம் எரு கொண்ட கலவை இட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
நீர் பாய்ச்சுதல் :
- நடப்பட்டதிலிருந்து முதல் 2 வருடங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் நீர் இறைக்க வேண்டும்.
- இவ்வாறு நீர் இறைக்கப்படும்பொழுது நாற்றானது தழைத்து வளரக்கூடியது.
- மண்ணில் தேவையான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
களையெடுத்தல் :
- நடப்பட்டதிலிருந்து முதல் 2 வருடங்களுக்கு களையெடுத்தல் அவசியமாகும்.
- 20 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் உள்கட்டுமான பணிகளுக்காகவும், மரச்சாமான்கள் தயாரிக்க மற்றும் சிற்ப பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரம் ஒட்டுப்பலகை தயாரிப்பிற்கும், காகித தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இம்மரம் பாறைபாங்கான பகுதிகளில் வளம்கூட்ட பயன்படுத்தப்படுகிறது.
- மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள்.
-->