தைல மரம்
அறிவியல் பெயர் :
யூகலிப்டஸ் குளோபுலஸ்
பொதுப்பண்பு :
- நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய பட்டையையுடைய இலையுதிர் மரமாகும்.
- இலைகள் நறுமணம் தரும் தன்மையுடையது.
பரவல் :
வாழிடம் :
கடற்கரை பகுதி மற்றும் மலைச் சரிவு பகுதிகளில் வளரக்கூடியது.
மண் :
அனைத்து மண்; வகைகளிலும் வளரக்கூடியது. இதன் நாற்றுகள் வளம் குறைந்த மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1100மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
500-1500மி.மீ
வெப்பநிலை :
12 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
- வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
- நீண்ட வறட்சியை தாங்கும் மற்றும் அதிக நீர் தேங்கும் பகுதிகளிலும் நன்கு வளரும்.
- ஆனால் அதிக பனி மற்றும் களைகளை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமைமாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- மறுதாம்பு முறை மற்றும் விதைகள் மூலம் நன்கு வளரக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- இளம் பருவத்தில் தரமான விதைகள் கிடைக்கிறது.
- விதையானது மே – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 230 - 350 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 30 -80 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
- ஒரு கிராம் விதையில் 45 நாற்றுகளை உருவாக்கலாம்.
விதை நேர்த்தி:
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- பிப்ரவரி – மார்ச் மாத இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
- ஒரு சதுர மீட்டர் தாய்பாத்திக்கு 75 – 100 கிராம் விதைகள் தேவைப்படும்.
- விதைக்கப்பட்டவுடக் தாய்பாத்தி மணல் கொண்டு லேசாக மூடப்படுகிறது.
- தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
- 10 - 15 தினங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்ந்த பிறகு தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு நாற்றுகள் மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ மற்றும் 3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.
- 10 – 20 செ.மீ உயரத்திற்கு ஆமல் வளரும் மறுதாம்புகள் வளர அனுமதிக்கப்பட வேண்டும்.
- அறுவடை செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் மறுதாம்பு வளர்கிறது.
- தேவையற்ற மறுதாம்புகள் முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில் நீக்க வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- இதன் இலைகள் நறுமண எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றது.
- மரக்கட்டையிலிருந்து அத்தியாவசியமான நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- மரம் 6-12 சதவிகித டானின் கொண்டது. பட்டை 3 -15 சதவிகித டானின் கொண்டது.
- பிற பயன்கள்:
- எரிப்பொருளாக பயன்படுகிறது. தைல மரம் 1900 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது.
- இலைகள் பொருயாதார முக்கியத்துவம் வாய்ந்த தைலம் எடுக்க பயன்படுகிறது.
- சுள்ளிகள் எரிப்பொருளாகவும், இலைகள் தைலம் எடுக்கவும் பயன்படுகிறது.
-->