கருங்காலி
அறிவியல் பெயர் :
அகேசியா கேட்டச்சு
பொதுப்பண்பு :
- கருங்காலி மரம் சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- ஒருங்கமைந்த இலைகளை கொண்டது. 30 – 50 சோடி இலைகள் ஒன்றினைந்து கொத்தாக காணப்படும்.
- பூக்கள் வெண்மையானது.
- நெற்றானது 10 15 செ.மீ நீளமுடையது மற்றும் 2 – 3 செ.மீ அகன்றது. தட்டையானது மற்றும் முற்றியபின் அடர் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
- இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் (அதிக குளிர் மற்றும் குளிர் பிரதேசங்கள் தவிர).
வாழிடம் :
கலப்பு இலையுதிர் காடுகளிலும், வனாந்திர மலை அடிவாரங்களிலும் பரவலாக காணப்படும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும்.
மண் :
வண்டல் மண் கலந்த மணல், மணற்பாங்கான மண், கரிசல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
மண் pH :
6 மற்றும் 7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
900 – 1200 மீ உயரம் வரை வளரும்.
மலையளவு :
500 – 2000மி.மீ
வெப்பநிலை :
37 – 43 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரும்.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகியவற்றில் நன்கு வளரும்.
மரப்பண்பு :
- அதிக ஒளியை விரும்பும் மரமாகும்.
- நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது.
- பனியை தாங்கி வளரக் கூடியது.
- மிதமான தீயை தாங்கி வளரக் கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயற்கை முறையில் பெருக்கமடையக்கூடிய வீதம் சில காரணங்களால் சற்று குறைவாகவே இருக்கும்.
- நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
- தகுந்த சூழ்நிலைகளிருப்பின் விதைகள் மூலம் பெருக்கமடையும் தன்மையுடையது.
- இது ஒரு எளிதான சிறந்த முறையாகும்.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் இளம் வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளமான விதையை தரக்கூடியது.
- நெற்றானது நவம்பர் முதல் பிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ச்சியடைகிறது.
- முதிர்ந்த நெற்று சேகரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் மரத்திலிருக்கும் பொழுது பூச்சிகளின் பாதிப்பு இருப்பதில்லை. எனவே விதைகள் மரத்திலிருக்கும் பொழுதே சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்து எடுக்க வேண்டும்.
- நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கப்படுகிறது. 6-8 மாதங்கள் வரை விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் சேமிக்கலாம்.
- 1 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 5 – 17 சதவிகிதமிருக்கும். 2 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 9 சதவிகிதமிருக்கும்.
- ஒவ்வொரு வருடமும் புதிய விதைகளை வழங்கவல்லது.
- ஒரு கிலே எடையில் 4590 நெற்றுகளிருக்கும்.
- ஒரு கிலே எடையில் 40000 விதைகளிருக்கும்.
- ஒவ்வொரு தனி மரமும் 0.5 – 2 கிலோ விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.
- விதைப்பதற்கு முன் சல்பியூரிக் அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.
- கொதித்து ஆறிய நீரில் 6 மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.
நாற்றாங்கால் படுக்கை:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படவேண்டும்.
- பிப்ரவரி மற்றும் மார்ச் மாதகால இடைவெளியில் விதைப்பு செய்வது சிறந்ததாகும்.
- விதைகளானது 20 செ.மீ இடைவெளியில் விதைக்கப்படவேண்டும். ஒவ்வொரு வரிசைகளுக்கிடையேயான இடைவெளி 2 செ.மீ என இருக்க வேண்டும்.
- 0.5 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
- விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்திக்கு நீர் இறைக்க வேண்டும்.
- 5 – 7 நாட்களில் விதைகள் முளைக்கதுவங்குகிறது.
- மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த பிறகு 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.
பாலித்தீன் பை மரக்கன்று:
- 22 x 9 செ.மீ அல்லது 23 x 13 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை நிறப்ப வேண்டும்.
- விதைகளை 1.5 செ.மீ ஆழத்தில் விதைப்பது அவசியமாகும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 3 வார முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- விதை முளைப்புத்திறன் 70 – 80 சதவிகிதமாகும்.
- விதைகள் விதைககப்பட்ட பாலித்தீன் பைக்கு பூவாளி கொண்டு நீர் இறைப்பது அவசியமாகும்.
- நைட்ரோஜீனஸ் உரம் பைக்கு 2 கிராம் வீதம் மே – ஜுன்கால இடைவெளியில் 4 முறை இட வேண்டும்.
- 50 – 60 செ.மீ உயரம் வளர்ந்த அல்லது 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுலை மாத காலத்தில் நாற்றுகள் நடப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
பாலித்தீன் பை கன்று:
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- நாற்றுகள் நடப்படுவதற்கு முன் குழிகளுக்கு நீர் இறைக்க வேண்டும்.
கர்னைகள் நடவு:
- 12-15 மாத வயதுடைய மரத்தில் இருந்து நாற்று குச்சி பெறப்படுகிறது.
- 10 மி.மீ சுற்றளவு கொண்ட குச்சிகள் இம்முறை நடவு செய்யப்படுகிறது.
- பருவ மழை நின்றவுடன் இம்முறையில் நாற்றகள் உற்பத்தி செய்ய வேண்டும்
பசுந்தீவன நடவு:
- இம்முறை நடவிற்கு 5 x 5மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- 4 - 5 வருடங்கள் வரை கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.
களையெடுத்தல் :
- நடப்பட்ட பண்ணையில் ஆகஸ்டு – செப்டம்பர் மாதகால இடைவெளியில் களையெடுத்தல் வேண்டும்.
- முதல் வருடம் - மூன்று முறை
- இரண்டாம் வருடம் - இரண்டும முறை
பக்க கிளைகளை நீக்குதல்:
- 5 வருடமான மரத்திற்கு பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
- அதன் பின் 10, 15, 20 மற்றும் 25ம் வருடங்களில் பக்க கிளைகளை நீக்க வேண்டும்
சந்தை மதிப்பு :
- இதன் ஒரு டன் மரம் தோராயமாக 3000 – 5000 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
பயன்பாடுகள்:
- இம்மரத்திலிருந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ம மருந்து பெறப்படுகிறது.
- அடர் கருங்காலி சாயம் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு வண்ணமூட்ட பயன்படுகிறது.
- அச்சு மை தயாரிக்கவும் பயன்படுகிறது.
பசுந்தாழ் தீவனம் :
- இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோந்து :
- இம்மரத்தின் தரமான கோந்தை தரவல்லது.
மரம் :
- இதன் மரம் கடினமானது மற்றும் எளிதில் அறுபடும் தன்மையற்றது. எனவே இம்மரம் வேளாண் உபகரணங்கள், வீட்டு தூண்கள், எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இம்மரம் படகு மற்றும் சக்கரம் தயாரிக்க பயன்படுகிறது.
ஒட்டுப்பலகை தயாரிக்க :
- கோந்து எடுக்க வெட்டப்பட்ட இதன் மரத்துண்டுகளை கொண்டு ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகிறது.
எரிபொருள் :
- இம்மரம் 5200 கிலோ கலோரி என்றளவு வெப்பத்தை தரவல்லது. மேலும் இம்மரம் தரமான கரி தயாரிக்க பயன்படுகிறது.
மரக்கட்டை:
மிக கடினமாகவும், அறுப்பதற்கும் கடினமாக இருக்கும்.
இவை வேளாண் உபகரணங்கள், கருவிகள், கைப்பிடி தயாரிக்கப்படுகிறது.
விறகு கட்டை:
கலோரி அளவு – 5200கி.கலோரி/கி.கி.
-->