பனை மரம்
அறிவியல் பெயர் :
போராசஸ் பிளாபெல்லிபெர்
பொதுப்பண்பு :
- 30 மீ உயரம் வரை வளரக்கூடிய நேரான மரமாகும்.
- இதன் இலை மின்விசிறி இறக்கை போன்றது. அளமையில் பச்சை நிறமாகவும் காய்ந்த பின் பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- இதன் சிறிய பூக்கள் ஒரு குழுமமாக அமைந்திருக்கும்.
- மூன்று அறைகளை கொண்ட காய் வட்ட வடிவமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். ஆனால் இந்தியா முழுவதும் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
ஆழமான, வளமான செம்மண் மற்றும் மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும். குறைந்தளவு மழையளவுள்ள வறண்ட பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
6.7-6.9
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
420 – 1000 மி.மீ
வெப்பநிலை :
30 - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பனை விதைகள் நிழலில் சேமித்து வைக்க வேண்டும். இருப்பினும் சிறிது காலத்தில் முளைக்கதுவங்கிவிடும் தன்மையுடையது.
- விதை முளைப்புத்திறன் 70 – 75 சதவிகிதமாகும்.
- விதையானது விதைக்க 2 மீ அகலமும், 60 செ.மீ ஆழமும் கொண்ட செங்கல் கான்கிரீட் கொண்ட நாற்றங்கால் அமைக்கப்பட வேண்டும்.
- விதையானது 1 மீ அகலமாகம், 60 ஆழமாகவும் வளரும் தன்மையுடையது.
- விதைகள் 10 மீ இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்.
- ஒரு வருடமான நாற்றுகள் தாய்பாத்தியிலிருந்து பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- வேர்கள் நன்கு வளர்ந்தபின் நடவுபணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நேரடி விதைப்பு முறையில் குழிக்கு (20 செ.மீ3) 3 – 4 விதைகள் என 10 மீ இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டபின் நாற்றானது மணல் மற்றும் மேல் மண் கொண்டு மூடப்படுகிறது.
- குழியானது காய்ந்த இலைகளை கொண்டு மூடப்பட வேண்டும்.
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும். இவ்வாறு விதைக்கப்படும்பொழுது ஒரு ஹெக்டருக்கு 1110 நாற்றுகள் நட முடியும்.
- நடப்பட்ட சில வருடங்கள் உழுதல், வட்டபாத்தி அமைத்தல் அவசியமாகும்.
- நடப்பட்ட நாற்றை சுற்றி மண் அனைப்பது இன்றியமையாததாகும்.
- மழை பருவ காலத்திற்கு முன் மண் அனைத்து வட்டப்பாத்தியமைக்க வேண்டும்.
- இவ்வாறு வட்டப்பாத்தி அமைப்பதால் மழை பருவ காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க முடியும்.
- முழு அளவுள்ள காற்றாடி போன்ற இலை 2 வயதான பின் தேன்றும்.
12 – 18 மீ (13 – 15 வருடம்) உயரம் வளர்ந்த பின் பூக்கத்துவங்குகிறது.
- இம்மரங்கள் பதனீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- பிப்ரவரி – மே மாத கால இடைவெளியில் 100 – 200 லிட்டர் பதனீரை 4 மாத கால இடைவெளியில் பெறலாம்.
- மரத்திற்கு மரம் பதனீர் மற்றும் நுங்கு மகசூல் மாறுபடுகிறது.
முக்கிய பயன்கள் :
பயன்பாடுகள்:
- பதநீர், நுங்கு மற்றும் பனம்பழம் உண்ணலாம்.
- பனங்கிழங்கு சீம்பு, குறுத்து உண்ண பயன்படுகிறது.
- இலைகள் வீட்டுக் கூரையாகவும், கூடையாகவும் மற்றும் பாய்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
நார்:
- கயிறு தரிக்க பயன்படுகிறது.