செந்தணக்கு
அறிவியல் பெயர் :
ஸ்டெர்குளியா யுரன்ஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது காகிதம் போன்றது, மென்மையானது மற்றும் பளபளப்பான சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் இளஞ்சிவப்பு நிறம் கலந்த மஞ்சள் நிறமுடையது.
- நட்சத்திர வடிவமுடைய கருப்பு நிற காய்களை கொண்டது. காயானது 3 – 4 விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக செம்பொறை மண்மற்றும் வறண்ட மணலில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
6.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1900 மி.மீ
வெப்பநிலை :
40 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
வறண்ட, வெப்பமான மற்றும் பாறைகள் நிறைந்த நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இம்மரம் ஒரு அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
- இம்மரம் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
வறண்ட இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மெதுவாக வளரக் கூடியது.
உயரம் :
15 மீட்டர்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது பிப்ரவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 4400 - 6400 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 50 – 100 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 18 – 90 சதவிகிதமாகும்.
- குளிர் நீரில் 6 மணிநேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில்; விதைக்கப்பட வேண்டும். விதைகள் ஏப்ரல் - மே மாத இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்.
- பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.
- 7 - 15 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.
- 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு:
- 1.8 மீ இடைவெளியில் 30 செ.மீ ஆழத்தில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 1.8 x 1.8 x 1.8 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :
- 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 1.2 x 1.2 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- குழிகள் மழை பொழிவுக்கு முன்னதாக எடுக்க்ப்பட வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
- 40 - 50 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2000 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரத்தின் கோந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- கோந்து காகித அச்சுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் மரம் தடிமரப்பயன்களுக்கு பயன்படுகிறது.
கோந்து உற்பத்தி :
- 90 செ.மீ மரச்சுற்றளவு கொண்ட மரம் கோந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- மரத்தில் கோந்து உற்பத்திக்காக 15 செ.மீ நீளத்தில் 10 செ.மீ அகலத்தில் மற்றும் 2.5 – 3 செ.மீ ஆழத்தில் மேற்தோல் நீக்கப்படுகிறது. அக்டோபர் - ஜுன் கால இடைவெளியில் மேற்தோல் நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.